நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018ம் ஆண்டில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பெயரில் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் நடிகர் எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.