2005 ஆம் ஆண்டு வெளியான, ‘சுக்கிரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் இருந்து வருகிறார்.
இவர் தற்போது பிச்சைக்காரன் 2 ,கொலை, ரத்தம், மழை பிடித்த மனிதன், வள்ளி மயில் உள்ளிட்ட படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார். 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீலங்காவில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி மற்றும் கதாநாயகி இருவருக்கும் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையடுத்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் இருவரும் கோலாலம்பூருக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மலேஷியாவில் இருந்து வரும் தகவல்கள் வந்துள்ளது. இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.