விஜய் ஆண்டனி நடிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ரத்தம். இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 6-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு, சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “தனக்கும், இயக்குநர் சி.எஸ்.அமுதனுக்கும், நீண்ட கால பழக்கம் உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், சி.எஸ்.அமுதனின் தந்தை தான் தனக்கு இசை கற்றுக் கொடுத்தார் என்றும், ஆனால், இசையை முழுவதுமாக கற்றுக் கொள்ளாமலே, சினிமாவில் அறிமுகமாகிவிட்டதால், அவருக்கு தன் மீது கோபம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
இவரது இந்த வெளிப்படையான பேச்சு, பலரிடமும், பாராட்டுக்களை பெற்று வருகிறது.