Connect with us

Raj News Tamil

“234 தொகுதியிலும் களமிறங்குறோம்” – விஜய் எடுத்த பிரம்மாண்ட முடிவு!

சினிமா

“234 தொகுதியிலும் களமிறங்குறோம்” – விஜய் எடுத்த பிரம்மாண்ட முடிவு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். சினிமா மட்டுமின்றி, அரசியலிலும் அதிக ஆர்வம் கொண்ட இவர், விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக, அவ்வப்போது தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில், தனது அரசியல் பயணத்தின், முதற் படியாக அதிரடி முடிவு ஒன்றை அவர் எடுத்துள்ளார். அதாவது, விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், கூறியுள்ள விவரங்கள் பின்வருமாறு:-

“ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல், அவருக்கு 7 பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

“தளபதி விஜய்” அவர்களின் சொல்லுக்கிணங்க, வருகின்ற ( 17.06.23 ) சனிக்கிழமை அன்று, “அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே கன்வென்ஷன் சென்டரில் 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, தளபதி விஜய் அவர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top