விஜய்சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படம், கடந்த சில தினங்களுக்கு முன்பு, திரையரங்குகளில் வெளியானது.
ஆரம்பத்தில் இருந்தே நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், இதுவரை 32 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, அசத்தியிருக்கிறது.
இப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் பெற்றிருப்பதால், இனிமேல் பிரம்மாண்ட இயக்குநர்களின் படங்களில் விஜய்சேதுபதி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், காக்கா முட்டை, கடைசி விவசாயி ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் வெப் தொடரில், விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார். இந்த தகவல், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.