வாரிசு படம் வெற்றியடைய வேண்டி சாமி தரிசனம் செய்த விஜயின் தாயார்!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு. இந்த படம் வரும் பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 24-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் மேற்கொண்டார். விஜயின் வாரிசு படம் வெற்றியடைய அனைவரும் கடவுளின் பிரார்த்தனை செய்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.