தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், அமைச்சர் உதயநிதியின் நண்பருமானவர் விஷால். இவர், கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தற்போது கலந்துக் கொண்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், கடந்த முறை அமைந்த அரசாங்கம், சினிமாவில் தலையிடவில்லை என்றும், இப்போது உள்ள அரசு சினிமாவில் அதிகமாக தலையிடுகிறது என்றும் கூறினார்.
மேலும், அரசு பொதுத்துறைகளை மட்டும் கவனித்துக் கொண்டாலே போதும் என்று கூறிய அவர், சினிமாதுறையில் இறங்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்கள் முடிவு செய்தால், நேரடி அரசியலில் இறங்குவேன் என்றும் தெரிவித்தார்.