திருத்தணியில் சாமி தரிசனம் செய்ய வந்த நடிகர் யோகி பாபு ஒரு மணி நேரம் காத்திருப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலுக்கு புத்தாண்டையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் திரைப்படத்துறையில் காமெடி நடிகரான நடிகர் யோகி பாபு முருகரை தரிசனம் செய்வதற்காக திருத்தணி முருகர் கோவிலுக்கு சென்றார்.

அங்கே விஐபிகள் செல்லும் பாதையில் செல்வதற்காக சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் அவரை அனுமதிக்காமல் காலம் தாழ்த்தினர். இதனால் மணமுடைந்த அவர் பக்தர்கள் இறங்கும் பாதையில் பத்திரிக்கையாளர் உதவியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யோகி பாபுவை கண்டவுடன் அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டும் கை கொடுத்தும் மகிழ்ந்தனர்.

RELATED ARTICLES

Recent News