சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் இரண்டு மாஸ் நடிகர்கள்!

காமெடி நடிகர்களாக இருப்பவர்கள் ஹீரோவாக நடிக்கும் கலாச்சாரம், தமிழ் சினிமாவுக்கு புதியது கிடையாது. ஆனால், அதில் ஒருசிலர் மட்டும் தான், மக்களால் ஹீரோவாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

அந்த வகையில், நடிகர் சூரி தற்போது ஹீரோவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். விடுதலை, கருடன், கொட்டுக்காளி என்று, தொடர்ச்சியாக ஹீரோவாக நடித்து அசத்தியிருக்கிறார்.

இந்நிலையில், இவர் அடுத்ததாக இன்னொரு படம் ஒன்றில், ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பு, இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர், சிறப்புத் தோற்றத்திலும் நடிக்க உள்ளார்களாம்.

RELATED ARTICLES

Recent News