“திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டேன்” – வெளிப்படையாக சொன்ன அமலா பால்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் அமலா பால். இயக்குநர் A.L.விஜயை திருமணம் செய்துக் கொண்ட இவர், கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.

பின்னர், ஜெகத் தேசாய் என்பவரை, கடந்த 2023-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு, கடந்த ஜூன் 11-ஆம் தேதி அன்று, குழந்தை பிறந்தது.

திருமணத்திற்கு பிறகும் பல்வேறு படங்களில் நடித்து வரும் அமலா பால், அந்தந்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் நடித்த படம் ஒன்றின் புரமோஷனுக்காக, Youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், “முதல் திருமணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால், 6 மாதத்தில் இருந்து ஒரு வருடம் வரை, ஒருவரை டேட்டிங் செய்த பிறகு தான், திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். ஆனால், அவை அனைத்தும், ஜெகத்தை சந்தித்த பிறகு மாறியது” என்று கூறினார்.

மேலும், ஜெகத்தை டேட்டிங் செய்துக் கொண்டிருக்கும்போது, தன்னுடைய குழந்தை வயிற்றில் வளர்ந்துக் கொண்டிருந்தது” என்று கூறினார்.

“ஜெகத் மற்றும் என்னுடைய வாழ்க்கையில், என் குழந்தையின் வருகை என்பது முக்கியமானது” என்றும் அவர் கூறினார். திருமணத்திற்கு முன்பே, கர்ப்பமாகிவிட்டேன் என்று அமலா பால் வெளிப்படையாக கூறியிருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News