“எனக்கும் இது பிடிக்கும்.. நானும் மனுஷி தான்” – அனிகா ஓபன் டாக்!

அஜித் நடித்த என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களில், அவருக்கு மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். இவர் தற்போது மலையாள சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது, ஹிப்-ஹப் ஆதி நடிக்கும் PT Sir என்ற படத்தில், முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், சினிமாவில் இருக்கும் பெண்கள் பெரிய அளவில் விமர்சனங்களை சந்திக்கிறார்கள் என்று கூறினார்.

மேலும், கவர்ச்சியாக உடை அணிவது தன்னுடைய தனிப்பட்ட விஷயம் என்றும், எந்த உடை அணிந்தாலும் விமர்சனம் செய்கிறார்கள் என்றும், அவர் கூறினார்.

அஜித்திற்கு மகளாக நடித்துவிட்டார் என்ற ஒரே காரணத்தால், இவர் கிளாமராக நடிக்கக் கூடாது என்றும், கவர்ச்சியான ஆடைகளை அணியக் கூடாது என்றும், இணையத்தில் சிலர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News