உடல் எடையை குறைத்த அஞ்சலி.. புகைப்படம் வைரல்!

கற்றது தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. இந்த படத்திற்கு பிறகு, அங்காடித் தெரு, மங்காத்தா, இறைவி உள்ளிட்ட பல்வேறு தரமான படங்களில், முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது, தெலுங்கு சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில், புகைப்படங்கள் சிலவற்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில், அவரது தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அதாவது, முன்பு இருந்ததை காட்டிலும், தனது உடல் எடையை கடுமையாக குறைத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News