எந்த துறையாக இருந்தாலும், பெண்களுக்கான பாதுகாப்பு என்பது, கேள்விக்குறியாகவே உள்ளது. குறிப்பாக, சினிமாத்துறையில் பல்வேறு பெண்கள், தங்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்களை, சமூக வலைதளங்களில், அவ்வப்போது பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், மாமனிதன், அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்த நடிகை அஞ்சலி நாயர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் நடித்த முதல் தமிழ் படத்தில், வில்லன் நடிகர் ஒருவர் நடித்திருந்தார். அவர் அந்த படத்தில் நடித்தது மட்டுமின்றி, இணை தயாரிப்பு பணிகளையும் செய்து வந்தார்.
இதன்காரணமாக, என்னிடம் தவறாக நடந்துக் கொள்ள அவர் முயற்சி செய்தார். என்னிடம் தனது காதலை வெளிப்படுத்திய அவர், என்னை பின்தொடர்ந்துக் கொண்டே இருந்தார்.
ஒரு நாள் என்னுடைய Hand Bag-ஐ பிடுங்கிக் கொண்டு, அதனை வீட்டிற்கு வந்து வாங்கிச் செல் என்றும் கூறினார். இதுமட்டுமின்றி, ரயிலில் பயணம் செய்தபோது, என்னை தள்ளிவிடவே முயற்சி செய்தார் என்று அந்த பேட்டியில் நடிகை அஞ்சலி நாயர் கூறியுள்ளார்.