Connect with us

Raj News Tamil

தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை!

சினிமா

தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை!

சிவா மனசுல சக்தி படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை அனுயா. இந்த படத்திற்கு பிறகு, ஒருசில தமிழ் படங்களில் நடித்த இவர், அதன்பிறகு மார்கெட் குறைந்ததால், சினிமாவில் இருந்து விலகினார்.

இந்நிலையில், இவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னுடைய ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது குறித்து பேசியிருந்தார்.

அதாவது, அந்த புகைப்படங்கள் அனைத்தும் மார்பிங் செய்யப்பட்டது என்றும், அந்த புகைப்படங்களால், தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் தனக்கு வந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தன்னுடைய குடும்பத்தின் உதவியுடன் தான், அந்த பிரச்சனையில் இருந்து மீண்டேன் என்று கூறியுள்ளார்.

More in சினிமா

To Top