பாஜக-வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்துள்ளார்.
நடிகை காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தார்.
இவர் பாஜக மாநில தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் கடந்த ஆண்டு ஜனவரியில் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜகவில் விலகிய காயத்ரி ரகுராம் இன்று (ஜன.19) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுக இணைத்துக் கொண்டுள்ளார்.