லவ் டுடே படத்தால் அதிகரித்த சம்பளம்..!

பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகமானவர் இவானா. கைவசம் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர், அண்மையில் கோமாளி இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த லவ் டுடே படத்தில் நடித்தார்.

இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, மூலைமுடுக்கெல்லாம் பிரபலமான இவானா, தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார்.

இந்த நிலையில் சுமார் 4 – நிறுவனங்களின் விளம்பரத்தில் நடிக்க சுமார் ரூ.4 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளாது.

மேலும் விளம்பர நிறுவனங்களும், இவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாராக உள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.