2000-களின் காலகட்டத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவர், திருமணத்திற்கு பிறகும், சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர், இன்று அதிகாலை திருப்பதி பெருமாள் கோவிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்தார். மேலும், கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையிலும் அவர் கலந்து கொண்டார்.
இதையடுத்து, ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும், இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.