நகைக் கடை ஊழியரை வெச்சி செய்த அஜித் பட நடிகை!

அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை கனிகா. இதையடுத்து, மலையாளத்தில் களமிறங்கிய இவர், பாக்யதேவதா, பழசிராசா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.

பின்னர், ஷ்யாம் என்ற Software Engineer ஒருவரை திருமணம் செய்துக் கொண்ட இவர், குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். தற்போது, சீரியல்களில் நடித்து வரும் கனிகா, சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது மூக்குத்தி குத்திக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மூக்குத்தி குத்தும்போது பயந்து நடுங்கி, மூக்குத்தி குத்தியவரை படாதபாடு படுத்தி ஒருவழியாக மூக்குத்தி குத்திக் கொண்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/tv/Ci1kJk6jFyU/?utm_source=ig_web_copy_link