சினேகாவின் இன்றைய நிலை இதுதான்! – கண்ணீர் சிந்த வைக்கும் கதை!

பேரழகன் படத்தில் சூர்யா பெண் பார்க்க செல்லும் காட்சி ஒன்று வரும். அதில், சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகை கற்பகம். இந்த காமெடி பெரிய ஹிட் அடித்திருந்தாலும், அதில் நடித்த நடிகை கற்பகத்தின் வாழ்க்கை வறுமையின் பிடியில் தான் சிக்கியுள்ளது.

சென்னை வியாசார்பாடியில் உள்ள மார்கெட் ஒன்றில் பணியாற்றி வரும் கற்பகம், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய அவர், முதன்முதலில் சினிமாவில் நடித்தது குறித்து பகிர்ந்துக் கொண்டார்.

“என்னுடைய கணவர் சினிமாவில் நடித்து வந்ததால், நானும் பிழைப்புக்காக சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன். சூர்யாவுடன் நடிக்கும்போது எனக்கு பயமா இருந்துச்சு.. அப்புறம் என் கணவர் எனக்கு தைரியம் சொன்னதால அந்த காட்சியில் நடிச்சு முடிச்சேன்” என்று தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

இவ்வாறு பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசிய அவர், தனது மகனின் கல்யாணத்திற்கு அழைப்பிதழ் வைக்க சூர்யாவின் வீட்டிற்கு சென்றிருந்தேன் என்றும், ஆனால் அவர் வீட்டில் இல்லாததால், பார்க்க முடியவில்லை என்றும் கூறினார். “சில நாட்கள் கழித்த பின்னர்.. ரூபாய் 5 ஆயிரம் பணத்தை தபால் மூலமாக சூர்யா அனுப்பியிருந்தார்” என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய வாழ்க்கை பற்றி பேசிய கற்பகம், எனது முதல் குழந்தை சராசரி உயரத்துடன் பிறந்தார். ஆனால், இரண்டாவது குழந்தை, எங்களை போலவே உயரம் குறைவாக பிறந்துவிட்டதாக தெரிவித்தார். கடும் வறுமையில் சிக்கியுள்ள எங்களை, சினிமாவும் கைவிட்டுவிட்டது.. நடிகர்கள் சங்கமும் கைவிட்டுவிட்டது என்று கூறி வறுத்தப்பட்டார்.

இவரது இந்த பேட்டியை பார்த்துள்ள பல்வேறு தரப்பினர், நவீன கலைஞர்களுக்கு, முன்னணி நடிகர்கள் தங்களால் முயன்ற உதவியை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.