Connect with us

Raj News Tamil

கோ படத்தின் நடிகைக்கு திருமணம்! வருங்கால கணவர் யார் தெரியுமா?

சினிமா

கோ படத்தின் நடிகைக்கு திருமணம்! வருங்கால கணவர் யார் தெரியுமா?

கோ படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கார்த்திகா நாயர். இந்த படத்திற்கு பிறகு, அண்ணக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களில் நடித்தார்.

இதையடுத்து, படவாய்ப்புகள் இன்றி தவித்து வந்த கார்த்திகா, சினிமாவில் இருந்தே வெளியேறினார். இந்நிலையில், இவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், நடிகை கார்த்திகா, தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

More in சினிமா

To Top