தலைமறைவான நடிகை கஸ்தூரி….தீவிரமாக தேடும் போலீஸ்..!!

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர் தெலுங்கு பேசும் மக்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதையடுத்து தெலுங்கர்கள் பற்றி அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க சென்றபோது முன்னதாகவே அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளார்.

இதையடுத்து அவரது செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை எழும்பூர் போலீசார் தீவிரமாக தேட தொடங்கி உள்ளனர்.

RELATED ARTICLES

Recent News