கீர்த்தி சுரேஷுக்கு டும் டும் டும்…! சோகத்தில் ரசிகர்கள்…

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து தன் திரை பயணத்தை தொடங்கிய இவர், கோலிவுட்டில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தற்போது தசரா, மாமன்னன், போலா ஷங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கீர்த்தியும் கிரீன் சிக்னல் தெரிவித்துள்ளதாகவும், மாப்பிள்ளை அரசியல்வாதி எனவும், இன்னும் தேதி குறிப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது.ஆனால் இந்த தகவல் வதந்தி எனவும் சிலர் கூறுகின்றனர்.

இந்த செய்தி அவரின் ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் ஒரு பக்கத்தில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் பரவி வரும் இந்த தகவல் உண்மையாக இருக்குமெனில் விரைவில் திருமணம் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நயந்தாராவை அடுத்து திருமணம் செய்யப்போகும் திரை பிரபலம் கீர்த்தி என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.