தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவருடன் ஜோடி சேர்ந்த நடித்த நடிகை மகேஸ்வரி, ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், அஜித்தின் குணங்கள் குறித்து, அவர் பேசியுள்ளார்.
அதாவது, “அஜித் மிகவும் அழகானவர் என்பதையெல்லாம் தான்டி, அவர் ஒரு நல்ல மனிதர்” என்று கூறியுள்ளார்.
மேலும், கலாச்சாரம் தெரிந்து நன்கு வளர்க்கப்பட்ட அவர், மற்றவர்கள் குறித்து அதிகம் யோசிப்பார் என்றும், கூறியுள்ளார். நிறைய பேர் அப்படி இருக்க மாட்டார்கள் என்றும், மகேஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.