தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், பல்வேறு சோதனைகளை கடந்து, அந்த நிலைக்கு முன்னேறியுள்ளார்.
இவ்வாறு இருக்க, நடிகை மாளவிகா மோகனன், பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “குறிப்பிட்ட நடிகைகளை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்.
ஒவ்வொருவரும் சூப்பர் ஸ்டார் தான்.. தீபிகா படுகோன் ஒரு சூப்பர் ஸ்டார்.. ஆலியா பட் ஒரு சூப்பர் ஸ்டார்.. எனவே, இப்படி சொல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பு அளித்த போட்டி ஒன்றிலும், நடிகை நயன்தாராவின் மேக்கப் குறித்து, மாளவிகா மோகனன் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.