கண்ணீர் மல்க அழுத கவர்ச்சி நடிகை மும்தாஜ்..!

கோலிவுட்டில் கவர்ச்சி நடனங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை மும்தாஜ். பின்னர் சிறிய ரோல்களில் நடித்து வந்த இவர், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கம்பேக் கொடுத்த மும்தாஜ், தற்போது இஸ்லாமிய புனித தளமான மெக்காவிற்கு சென்றுள்ளார்.

அங்கு பூமியில் பிடித்த இடத்திற்கு சென்றுள்ளேன், என்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை, எனது பாவங்களை மன்னியுங்கள் என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.