சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில், நடிகர் சூர்யா நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை முடித்த பிறகு, சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்தில், அவர் நடிக்க உள்ளாராம்.
இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில், நடிகை நஸ்ரியா கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.
இவர் கடைசியாக தமிழில், திருமணம் எனும் நிக்கா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.