ஓகே கண்மணி, நாய் சேகர் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பவித்ரா. வளர்ந்து வரும் நடிகையாக உள்ள இவர் குறித்து, பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வந்தது.
இந்த வதந்திகளுக்கு, நடிகை பவித்ரா, தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “என்னை பற்றியும், எனது உடல் எடை பற்றியும், பல்வேறு யூகங்கள், பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்வேறு விளக்கங்கள் அளித்தபோதிலும், அவர்கள் அதனை நிறுத்துவதாக தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும், “தீவிரமான உடல் நலப் பிரச்சனையால், நான் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறேன்” என்றும், “உண்மையான அக்கறையுடனும், அன்புடனும், என் நலம் குறித்து கேட்ட அனைவருக்கும், என் நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும், அவர் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, உங்களது கேளிக்கைக்காக, வதந்திகளை பரப்பாதீர்கள் என்றும், நடிகை பவித்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.