Connect with us

Raj News Tamil

கவினுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா

கவினுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

நட்புனா என்னனு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கவின். இந்த படத்திற்கு பிறகு, லிஃப்ட், டாடா ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த இவர், பல்வேறு படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தனது நெருங்கிய நண்பரும், இயக்குநர் நெல்சனின் உதவி இயக்குநருமானவரின் திரைப்படத்தில், கவின் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் டான், டாக்டர் ஆகிய படங்களில் நடித்திருந்தவர் தான் பிரியங்கா அருள் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top