தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும், பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மார்கெட் குறைந்த பிறகு, சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகிய இவர், கடந்த 2010-ஆம் ஆண்டு அன்று, தொழில் அதிபர் ஒருவரை, திருமணம் செய்துக் கொண்டார்.
தற்போது, 3 குழந்தைகள் மற்றும் கணவருடன், வெளிநாட்டில் வசித்து வருகிறார். சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள ரம்பா, தற்போது, தனது மூத்த மகளின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த நெட்டிசன்கள், “இது ரம்பாவின் சிறு வயது புகைப்படம் என்று நினைத்தேன்” , “அச்சு அசல் ரம்பா போலவே உள்ளாரே” உள்ளிட்ட கமெண்ட்ஸ்களை வெளியிட்டு, ஆச்சரியம் அடைந்துள்ளனர். லைக்ஸ்களை குவித்து வரும் இந்த புகைப்படம், இணையத்திலும் வைரலாக பரவி வருகிறது.