“அந்த மாதிரி படத்தில் நடிக்க ஆசை” – ஓப்பனாக பேசிய ராஷி கண்ணா!

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராஷிகண்ணா. தொடர்ந்து ஹிந்தி,தெலுங்கு,மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது கார்த்திக்கு ஜோடியாக சார்தார் படத்தில் நடித்து வரும் இவர், இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது, எதுபோன்ற படங்களில் நடிக்க விரும்புவதாக நிரூபர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த அவர், தனக்கு பேய் படங்களில் நடிக்க ஆசை உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற படங்களில் நடிக்கும்போது த்ரில்லாக இருக்கும் என்றும், இந்த மாதிரி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் உடனே நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.