விளை பொருட்களுக்கு உரிய லாபம் கிடைக்கவில்லை என்றாலும், விவசாயிகள் விவசாயத்தை கைவிடவில்லை என்று, நடிகை ரோகினி தெரிவித்துள்ளார்.
தஞ்சையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இயக்கம் சார்பில், சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது.
3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், நடிகை ரோஹினி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், விவசாயிகள் தங்களது உயிரைக் கொடுத்து, விளைநிலங்களை பாதுகாத்து வருவதாகவும், ஆனால், அவர்களுக்கு விளை பொருட்கள் மீதான உரிய லாபம் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும், விளைநிலங்களை அவர்கள் கைவிடுவதில்லை என்றும், அவர் குறிப்பிட்டார்.