சினிமாவில் களமிறங்கும் நடிகை ரோஜா மகள்..? ஆ.கே.செல்வமணி நச் பதில்..!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. பின்னர் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்த இவர், இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அன்ஷூ மாலிகா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் அன்ஷா மாலிகா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும், இதற்காக நடிப்பு பயிற்சியும் எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இது குறித்து பேசிய ஆர்.கே.செல்வமணி தனது மகள் அன்ஷா மலிகா நன்றாக படிப்பதாகவும், அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருவதாவும் கூறினார். மேலும் அவருக்கு நடிப்பில் ஆர்வமில்லை ஆனால் தங்கள் பிள்ளைகள் முடிவெடுக்கும் சுதந்தரத்தை நானும் ரோஜாவும் நல்ல பெற்றோராக வழி நடத்துவோம் என்று பேசியுள்ளார்.