அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா!

ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டே இருக்கும்போது, யசோதா படத்திற்கு டப்பிங் பேசியுள்ள புகைப்படத்தை, நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுமட்டுமின்றி, தனக்கு அரிய வகை நோய் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே குறைவதை மயோசிடிஸ் என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர். இந்த பிரச்சனை தான் தற்போது, சமந்தாவிற்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விரிவாக பதிவிட்டுள்ள அவர், இந்த பாதிப்பை ஏற்றுக் கொண்டு அதனுடன் போராடிக் கொண்டிருக்கிறேன் என்றும், விரைவில் பூரண குணமடைவேன் என்றும் தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள், ஆறுதல் தெரிவித்தும், குணமடைவதற்கு வாழ்த்து கூறியும் வருகின்றனர்.