பிரபல ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துக் கொண்டு பிரபலம் ஆனவர் சம்யுக்தா. இதையடுத்து, வாரிசு, காபி வித் காதல், துக்ளக் தர்பார் என்று பல்வேறு படங்களில், முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தனது கணவரை விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், முன்பைவிட தற்போது வலிமையாக இருப்பதாகவும், அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.