அஜித் நடிப்பில் கடந்த 10-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆன திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தில், அஜித்தின் நடிப்பு எந்த அளவுக்கு பாராட்டப்படுகிறதோ, அதே அளவுக்கு பிரியா வாரியரின் நடனமும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
இதன்மூலம், அந்த நடிகைக்கு, தமிழ் சினிமாவில் புதிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இவ்வாறு இருக்க, இந்த கதாபாத்திரத்தில், முதன்முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, இந்த கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீ லீலா தான் முதலில் நடிக்க இருந்தாராம். ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அவரால் நடிக்க முடியவில்லையாம். அதன்பிறகு, பிரியா வாரியர் நடித்ததாக, தகவல் பரவி வருகிறது.