2008ம் ஆண்டு வெளியான ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சுனைனா தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ‘எனக்கு சிறிது காலம் அவகாசம் கொடுங்கள். நான் விரைவில் மீண்டு வருவேன்’ அதில் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு என்ன பாதிப்பு என்பதை சுனைனா குறிப்பிடவில்லை. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் விரைவில் நலம் பெற வேண்டுவதாக கூறி வருகின்றனர்.