காதலில் விழுந்தேன் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இந்த படத்திற்கு பிறகு, மாசிலாமணி, சில்லுக் கருப்பட்டி, தொண்டன் உள்ளிட்ட பல்வேறு படங்களில், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது, ஒருசில படங்களில் மட்டும் நடித்து வரும் இவர், தனது சமூக வலைதளப்பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஐஸ் கட்டிகள் கொண்ட ஒரு பாத் டப்பில், யோகாசனம் செய்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோவுக்கு, அவனால் முடியும் என்று அவன் நினைத்தான் மற்றும் அவனால் முடியாது என்றும் அவன் நினைத்தான். பொதுவாக இது இரண்டும் சரி தான். என்று கேப்ஷன் வழங்கியுள்ளார்.