சினிமா
நடிகருக்கு மேடையிலேயே நச்சுனு முத்தம் கொடுத்த சுப்ரமணியபுரம் நடிகை!
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம், தமிழில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. திருமணத்திற்கு பிறகு, சினிமாவில் இருந்து விலகிய இவர், நீண்ட நாட்களுக்கு பிறகு, மந்த் ஆஃப் மது என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட நடிகர் சாய் தரம் தேஜ், உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், சிறுவயதில் இருந்தே நானும் சுவாதியும் நெருங்கிய நண்பர்கள் என்று தெரிவித்தார். மேலும், இந்த திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறினார்.
இவரது பேச்சை கவனித்த சுவாதி, திடீரென அந்த நடிகருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2023/09/c5a5a39fd74c2ca067f656f32f0250d4-1024x576.jpg)
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)