Connect with us

Raj News Tamil

அந்த விஷயத்தில் நடிகர்கள் Weak.. நடிகைகள் தான் Strong.. அதிர வைத்த தமன்னா!

சினிமா

அந்த விஷயத்தில் நடிகர்கள் Weak.. நடிகைகள் தான் Strong.. அதிர வைத்த தமன்னா!

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என எந்தவொரு மொழி திரைப்படமாக இருந்தாலும், அதில் ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெறுவது சகஜமான ஒன்று தான்.

இவ்வாறு காட்சிகள் எடுக்கும்போது, நடிகர்கள் மிகவும் எளிமையாக நடிப்பார்கள் என்றும், நடிகைகள் தான் தயங்குவார்கள் என்றும், ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில், இதுகுறித்து நடிகை தமன்னா தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், ரொமான்ஸ் காட்சிகளை எடுக்கும்போது, பெண்களை விட ஆண்களே அதிகம் அசௌகரியமாக உணர்வார்கள் என்று கூறினார்.

மேலும், நடிகைகள் தவறாக எண்ணிவிடுவார்களோ என்ற எண்ணம், நடிகர்களுக்கு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top