Connect with us

Raj News Tamil

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி..!!

தமிழகம்

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி..!!

நடிகையும், முன்னாள் எம்.பி.,யுமான விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தெலங்கானா மாநிலத்தில் வரும் 30ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.தற்போது அங்கு சந்திர சேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்தித்த விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு தெலுங்கானா தேர்தல் பிரச்சார குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பாஜக கட்சியின் மூத்த நிர்வாகியான விஜயசாந்திக்கு தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு தரவில்லை. மேலும் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என சொல்லப்பட்டது. இதனிடையே விஜயசாந்தி, பாஜகவிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

More in தமிழகம்

To Top