சின்னத்திரையில் அறிமுகமாகி, தற்போது வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் புகழ். இவர் தற்போது ‘மிஸ்டர் ஜு கீப்பர்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் நடைபெற்றது.
அந்த விழாவில் நடிகர் புகழ் பேசியது அங்கிருந்த அனைவரையும் சற்று வருத்தப்பட வைத்துள்ளது. அதாவது, நான் ஹீரோவாக நடிக்கிறேன், எனக்கு ஜோடியாக நடிக்க முடியுமா என்று சில நடிகைகளிடம் தொலைபேசி மூலம் கேட்டபோது, எந்த பதிலும் சொல்லாமல், என்னை ‘பிளாக்’ செய்துவிட்டனர். ஆனால் ஷிரின் கான்ச்வாலா மட்டுமே எனக்கு ஜோடியாக நடிக்க சம்மத்தித்தார்’ என்று கூறினார்.
இதனை அறிந்த நெட்டிசன்கள், ‘இதையெல்லாம் நினைத்து கவலைப்படாதீங்க.. முன்னேறி போயிட்டே இருங்கன்னு’ கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.