ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது. ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 16 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ஓம் ராவத் மற்றும் கதாநாயகி க்ரீத்தி சனோன் உள்ளிட்டோர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டனர். அப்போது இயக்குனர் க்ரீத்தி சனோன் கன்னத்தில் முத்தமிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதற்கு ஆந்திர மாநில பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.