சினிமா
அஜித் பட இயக்குநருடன் கைகோர்க்கும் அதிதி ஷங்கர்!

Published on
முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிப்பில், சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் விருமன். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி. இயக்குநர் ஷங்கரின் மகளான இவர், முதல் படத்திலேயே பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.
தற்போது, மன்டேலா பட இயக்குநர் மடேன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் என்ற திரைப்படத்தில், நடித்து வருகிறார். இந்த படத்திற்கு, இயக்குநர் விஷ்ணு வர்தன் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, ஆரம்பம், சர்வம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், ஹிந்தியில் வெர்ஷா என்ற படத்தை இயக்கியுள்ளார். பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தை, தமிழில் இயக்க உள்ளார். அதில், தான் நடிகை அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Continue Reading
Related Topics:aditi shankar, aditi shankar next film, vishnu vardhan

Click to comment