அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த அதிதி ஷங்கர்!

விருமன் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ஷங்கர். இந்த படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயன் உடன், மாவீரன் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களுக்கு பிறகு, தமிழ் சினிமாவில் தலை காட்டாத இவர், தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, விஜய் கனகமெடலா என்ற தெலுங்கு இயக்குநரின் படத்தில், கதாநாயகியாக நடிக்க, அதிதி ஷங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு, அக்டோபர் மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News