சிறந்த புகைப்பட கலைஞனாக மாறிய ஆதித்யா எல்-1 ! இஸ்ரோ வெளியிட்ட வினோத புகைப்படம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் விண்கலனை கடந்த செப்டம்பர் 2 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டும் தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு, அவ்வப்போது இஸ்ரோவிற்கு (பூமிக்கு) புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

இந்நிலையில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான பாதையில் லாக்ரஞ்சியன் புள்ளி எனப்படும் L1 புள்ளியை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 , அதனுள்ளே பொருத்தப்பட்ட அதி நவீன கேமரா மூலம் தன்னையும், பூமியையும் மற்றும் நிலவையும் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக மகிழ்ச்சியுடன் இஸ்ரோ தனது அதிகாரபூர்வ எக்ஸ் (டுவிட்டர்) என்னும் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் கூடிய வீடியோவை தெரிவித்துள்ளது இஸ்ரோ பகிர்ந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News