BREAKING || ராகுல் காந்தி பதவி பறிப்பு.. நாடாளுமன்றத்தை பதற வைக்கும் எதிர்கட்சியினர்..!

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஆதரவாக, ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட ராகுல் காந்தி, மோடி என்ற பெயரில் உள்ளவர்கள் எல்லாம் திருடர்கள் என்று கூறி, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

இதையடுத்து, அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, அதுதொடர்பான விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், சமீபத்தில் அந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதன்காரணமாக, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளதாக, மக்களவை செயலகம் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனால், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரும், அதன் கூட்டணி கட்சியினரும், தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இந்நிலையில், இன்று கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில், ராகுல் காந்தி பதவி நீக்கத்திற்கு எதிராக, எதிர்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இவ்வாறு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், மாநிலங்களவை 2 மணி வரையும், மக்களவை 4 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News