11 வது நாளாக இன்றும் முடங்கிய நாடாளுமன்றம் – இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மேலும் அவருடைய எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி பதவி பறிக்கப்பட்டத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து முழக்கங்களை எழுப்பினர். இதன் காரணமாக இரு அவைகளும் 11-வது நாளாக இன்றும் முடங்கியுள்ளது.