மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான அவதூறு கருத்துகள் தொடர்பான வழக்கில் ராகுல் காந்தி மீது பாஜகவைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா சார்பில் வழக்கு தொடரப்பட்டு சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 26-ல் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அரசியல் காரணங்களுக்காகவும், தன் பெயரைக் கெடுக்கும் நோக்கத்திற்காகவும் புனையப்பட்ட வழக்கு என்று அவர் கூறினார். இதையடுத்து ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 23ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.