ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சமீபத்தில் இயற்கை எய்தினார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட, இடைத்தேர்தல் நடக்கும் தேதியும், தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்யப்பட்டது.
வரும் 5-ஆம் தேதி அன்று, தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று, அதிமுக கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்து எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சி அதிகாரத்தை திமுக தவறாக பயன்படுத்தும் என்பதால், இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், தேமுதிகவும், இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். “ஜனநாயகத்தில் விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.