‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நாளை ராமேஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை துவங்க உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
இந்த நடைபயண நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதைபோல அண்ணாமலையின் நடைபயணத்தில் பா.ம.க.வும் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.